தமிழர்களின் பண்பாடுகள்
பண்பாடு
பண்பு படுத்தப்பட்ட அல்லது பண்பட்ட அல்லது திருத்தங்களுக்கு உள்ளாகிய ஒரு சமூகத்தின் வழக்கங்களை குறிக்கும். பண்பாடு என்றும் திருத்தங்களுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டே நிற்கின்றது. "பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது.
பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக்கொண்ட மொழி, கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர்.
உணவு, உடை, திருமணம் செய்கிற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்."
பண்பாடு என்பது உண்மையில் மானுடவியல் சமூகவியல் நிலைப்பட்ட ஒரு வாழ்வியற் களம். ஆங்கிலத்தில் பொதுவாக ‘Culture’ என்று சொல்வதற்கான தமிழ்ப் பதமாக இப்பொழுது கலாச்சாரம் என்று சொல்கிறார்கள். உண்மையில் கலாச்சாரம் என்பதற்கும் பண்பாட்டுக்கும் குழப்பம் கிடையாது.
மிகச் சுருக்கமாகச் சொன்னால் பண்பாடு என்பது முதலில் அடிப்படையில் நாம் வாழ்கின்ற முறைமை. இந்த வாழுகின்ற முறைமை என்பதனுள் வாழ்க்கையின் சகல அம்சங்களும் அடங்கும்.
அன்றாட வாழ்க்கை, உறவு முறைகள், விவாகம், பிள்ளை வளர்ப்பு, மரணம், உணவு வகைகள், ஆடை ஆபரணங்கள், வைபோகங்கள், சடங்குகள் இவற்றின் ஊடாக, தோன்றுகிற ஒரு மனநிலை. இவற்றின் அடியாக வருகின்ற அந்த வாழ்க்கைமுறை இன்னொன்றோடு ஒப்பு நோக்குகிறபொழுது அல்லது ஒப்பு நோக்கப்பட வேண்டிய தேவை ஏற்படுகின்ற பொழுது என்னை அடையாளங் காட்டுவதாக நான் கருதுகிறேன்.
அதுதான் பண்பாடு. அந்த பண்பாட்டினுள் இரண்டு பிரதானமான விடயங்கள் உள்ளன. ஒன்று வாழ்க்கை முறை, மற்றொன்று பெறுமானங்கள். இந்த வாழ்க்கை முறைக்கும் பெறுமானங்களுக்கும் தொடர்புண்டு. பெறுமானம் என்பது values.
பெறுமானம் என்பது ஒரு எண்ணக்கரு நிலைப்பட்ட முக்கியத்துவமுடைய சிந்தனை மனப்பாங்கு. ஆனால் அவற்றிற்கு ஒரு பலம் உண்டு. இந்த பெறுமானங்கள் ஒரு தனிமனிதனுடைய, ஒரு குழுமத்தினுடைய கண்ணோட்டங்களைத் தீர்மானிக்கிறது.
யாரைக் கல்யாணம் பண்ணலாம், யாரைக் கல்யாணம் பண்ணக் கூடாது என்பது, ஒரு அயலவரை எப்படி மதிக்கிறது, ஒரு ஆசியரை எப்படி மதிக்கின்றது என்பது எல்லாம் பெருமானங்கள்தான்.
இவை யாவும் ஒருமுகத் திரண்டு நமக்குள்ளே இருப்பதனால் நாங்கள் பண்பாடு என்பதனை எங்களுடைய ஒரு வாழ்க்கை முறையின் அடையாளமாகக் கருதுகிற ஒரு தன்மை உண்டு. இதனால்தான் இந்த பண்பாடு என்ற ஒரு சொல்லுக்கு ஒரு அசாதாரணமான முக்கியத்துவம் வந்திருக்கிறது.
பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்கு பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
மொழி
ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
உணவு
உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திட, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். விலங்குகள் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றன. இவை பொதுவாக விலங்கு அல்லது தாவர மூலத்தில் இருந்தே பெறப்படுகின்றன.
இசை
இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அரும் சாதனம் இசை.