|
அறிவுதான் மிக உயர்ந்த செல்வம். அறிவுச் செல்வத்தை அனைவரும் பெறவேண்டும். அறிவுச் செல்வத்தை எந்த அளவு பெறுகின்றீர்களோ, அந்த அளவுக்குத்தான் உங்கள் வாழ்க்கையும் உயரும், செழிக்கும்.
இதன் பின்னர், கல்விக் கூடங்களுக்குச் செல்லுகின்றீர்கள். இங்கே முறையான திட்டமிட்ட அறிவுப்பயிற்சி உங்களுக்குத் தரப்படுகின்றது. இந்த அறிவுப் பயிற்சி, உங்கள் வாழ்க்கைக்கும் உதவுகின்றது, உங்களையும் உயர்த்துகின்றது.கல்விக் கூடங்களில், கல்விப் பயிற்சியைத் திட்டமிட்டு ஒவ்வோர் ஆண்டுக்கும் முறைப்படுத்தி உங்களுக்கு அளிக்கின்றார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக நீங்கள் பாடங்களைப் படிக்கவேண்டும். அந்த வகுப்புக்கென்று ஒரு பாடத்திட்டம் இருக்கும். குறிப்பிட்ட சில அறிவுப் போதனைகளும் இருக்கும். ஆசிரியர்கள் உங்கள் பயிற்சிக்கு உதவுவார்கள், உங்கள் அறிவு வளர்ச்சியையும் கண்காணிப்பார்கள். ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், உங்கள் அறிவு வளர்ச்சியை மதிப்பிட்டு அறிவதற்குத் தேர்வுகளில் கேள்வித்தாள்கள் தரப்படும். தரப்படுகின்ற கேள்வித் தாள்களிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் சிந்தித்து விடை எழுதவேண்டும். உங்கள் விடையின் தரத்தை மதிப்பிட்டுத் தக்க மதிப்பெண்களைத் திருத்துவோர் வழங்குவார்கள். இப்படிப் பெறுகின்ற மதிப்பெண்களும் உங்கள் அறிவை மதிப்பிட உதவும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மதிப்பெண் பெற்றால்தான் நீங்கள் மேல் வகுப்புக்குப் போகமுடியும். கல்விப் பயிற்சியின் அடுத்த கட்டத்திலும் கால் வைக்க முடியும்.தேர்வுகளில், நீங்கள் சரியான விடைகளை எழுத வேண்டும். இதற்கு நீங்கள் அந்த வருடம் கற்றவை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக நினைவுக்கு வரவேண்டும் அதாவது, உங்களுக்கு நல்ல வளமான ஞாபசக்தி இருக்கவேண்டும். மேல் செல்ல...ஞாபகசக்தி நன்றாக இருந்தால்தான், படித்த பாடங்கள் தேர்வுகளின் போது நினைவுக்கு வரும். நீங்களும் சரியான விடைகளை எழுதலாம். உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றும் சிறப்பாகத் தேர்ச்சி அடையலாம். மேல் வகுப்புக்கும் சென்று, அடுத்த கட்டப் படிப்பையும் தொடங்கலாம். ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சி பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சி தரும். உங்கள் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி தரும். உங்கள் ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சி தரும். நீங்கள் படிக்கும் பாடங்களைக் கவனித்து, மனத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது இவற்றை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு தொடர்ந்து முறையாகப் படித்து வந்தால், நீங்கள் படித்தவை எல்லாமே நினைவில் நிற்கும். எந்த கேள்விகளுக்கும் சரியான விடையினை எழுதவும் உங்களால் முடியும்.ஞாபகசக்தி என்பது, தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு உதவுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. உங்கள் கல்விப் பயிற்சி முடிந்தது, நீங்கள் ஒரு பணியில் அமரும்போது உங்களுக்கு அது மிகவும் உதவும். நிறையப் படித்தால் மட்டும் போதாது. படித்தவை நினைவில் இருக்கவேண்டும். வேண்டியபோது, அவை ஞாபகத்திற்கும் வரவேண்டும். வேண்டியபோது ஞாபகத்துக்குவராத அறிவால் எந்தப் பயனுமே ஏற்படாது. எந்த அளவுக்கு ஞாபகசக்தி இருக்கின்றதோ அந்த அளவுக்குத்தான் படித்தறிந்தவையும் வாழ்க்கைக்குப் பயன்படும்.ஆகவே, கல்விப் பயிற்சிக்கும், வாழ்க்கை முயற்சிக்கும், நல்ல ஞாபகசக்தியுடன் விளங்குவது அவசியம் என்பது உங்களுக்கு விளங்கும். ஞாபகசக்தியை எப்படி முறையாக வளர்த்துக் கொள்வது? அதைப்பற்றிய செய்திகளை இங்கே அறிந்து கொள்ள முயல்வோம். |