| |
| |
 |
| மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... |
மூன்றெழுத்து கெட்டவார்த்தை அந்த வார்த்தை, சிஷ்யா'னு நினச்சு வந்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல.
இது ஒரு அறிவுப்பூர்வமான ஆழமான பதிவாக்கம், சொல்லிட்டேன்.மூன்று எழுத்துகள் ரொம்ப முக்கியமானது.ஆங்கிலத்துல இருக்கற இருபத்தியாறு எழுத்துகளையும் மாத்தி மாத்தி போட்டா பதினேழாயிரத்தி தொச்சம் தடவை இந்த மூணேழுத்த வச்சே வித்த காட்டலாம்.
சரி, இப்போ எதுக்கு மூணெழுத்து? காரணம் இருக்கே!!
இன்னிக்கு மெட்ரோல வரச்சே என்ன காரணத்தாலோ நம்ம மூளை வேலை செய்ய ஆரமிச்சது.
அது என்னடா அது, எல்லா abbreviation-களும் (பெரும்பாலான) மூன்றெழுத்துகளில் தான் இருக்குதுன்னு. ஏன் மூணெழுத்துன்னு விடை கண்டுபிடிக்க முடியல.ஆனா, இதப்பத்தியும் என்னைய மாதிரி புத்திமான்கள் ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு புரிஞ்சு புளங்காகிதம் ஆயிடுச்சு.
இதுக்கு ஆங்கிலத்துல TLA (three-letter abbreviation: இதுவும் TLA!)னு சொல்றாங்க. |
| |
| உதாரணங்கள் |
| |
|
1. விண்டோஸ் OS இல் பயன்படுத்தும் அனைத்து file extensions
.jpg,.sif,.exe,.bat
|
| |
|
2. கணினி சார்ந்தவை
FDD, HDD, RAM, CPU, IBM, AMD
|
| |
|
3. ஊடகங்கள்
BBC, CNN, CBS, PBS, ABC, AIR |
| |
|
4. மோட்டார் வாகனங்கள் சார்ந்தவை
BMW, ABS, EBD, SUV, KIA, MUL, CDI
|
| |
|
5. தயாரிப்பு நிறுவனங்கள்
TDK, DAC
|
| |
|
6. பார்மேட்டுகள்
DVD, VCD, VHS
|
| |
|
7. அரசு நிறுவனங்கள்
FBI, KGB, FSB, CIA, CID, RAW, ISI
|
| |
|
8. பொறுப்புகள்
CEO, CTO, COO, CFO
|
| |
|
9. Time Zones
IST, MST, GMT, PST, EST, CST
|
| |
|
10. உலகெங்குமுள்ள அனைத்து விமானநிலையங்களுக்கும் மூன்றெழுத்து குறியீடுகள் தான்
LED, SVO, LAX, SFO
|
| |
|
11. பணங்கள் பற்றிய குறியீடுகள்
FRA, USD, RUR, INR
|
| |
|
--இராமநாதன்
|
|
|
|
|
|
|
|
|


|
|